Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் – உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை பொறுத்தே தீர்மானிக்கப்படும்

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதால், அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.

நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே கருத்தில் கொள்கிறோம் என்பதால், இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன.

எனவே, அந்த எஞ்சிய நாட்களில் உலகச் சந்தையில் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே நாங்கள் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பீப்பாயொன்று 100 டொலரை எட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்றங்கள் தீவிரமடைந்ததாலும், செங்கடலில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க சவூதி அரேபியா பயன்படுத்தும் பிரதான கப்பல் பாதையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியதாலும், உலகளாவிய பிரதான கச்சா எண்ணெய் விலைக் குறியீடான பிரென்ட் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து !

சித்திரை 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் 27,300 மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஆனி 27, 2026
இலங்கைவானிலை

கடற்பகுதிகளில் பலத்த காற்று!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube