ஈரானின் கோரிக்கைக்கு அமைவாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேரடியாகவும் பிரதிநிதிகள் மூலமாகவும் ஈரான் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையே நேர்மறையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், இதன்மூலம் நல்ல முடிவுகள் எட்டப்படலாம் என்றும் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தீவிரமான நடவடிக்கைகளின் காரணமாகவே ஈரான் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
