Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களாக ஆசிரியர் இல்லை – மூங்கிலாறு ஆரம்ப பாடசாலை முன்பாக பெற்றோர் போராட்டம்

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று (27) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும் நிலையில், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலையின் ஆசிரியர் இல்லா பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை

நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளின் விரைவான தீர்வினைப் பெற்று தரவேண்டும் என்பதுடன் இவ்வாறான நிலை தொடர்ந்தால் மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்லும் எனவும் குறிப்பிட்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளர் கைது!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம்

ஆனி 7, 2026
இலங்கைவானிலை

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரும்போக உர விநியோகம் குறித்து கலந்துரையாடல்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube