தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வாலான ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று (29) அதிகாலை 05.30 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வாலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
காயமடைந்த பொலிஸ் கொஸ்தாபல் பாணத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
