Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரஜீவ் அமரசூரியவுக்கு எதிரான கருத்து: எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய இன்று கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கம்

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்று (29) காலை 9.30 மணிக்கு கொழும்பில் கூடவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் விசேட பிரேரணை நிறைவேற்றியிருந்தது.

இதையடுத்து, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் அரசியல் உடன்பாட்டின் அடிப்படையிலேயே ரஜீவ் அமரசூரிய செயற்படுவதாகவும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முற்றாக நிராகரித்து, அது அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கண்டித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த கருத்துக்கு எதிராக சட்டரீதியான மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க பொதுச்சபை இன்று கூடவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீர் தங்க விலை ஏற்றம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube