Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். ஆலய திருவிழா வாணவேடிக்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

ஆவணி 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை (20) இரவு நடைபெற்ற திருவிழாவின்போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின்விளக்குகளின் பயன்பாடு காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 235ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கண் பாதிப்புக்குள்ளான 235 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

May be an image of one or more people and hospital

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களும் இவ்வாலய திருவிழாவின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கண் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (20) திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண்களில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

May be an image of one or more people and hospital

மேலும், நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவின்போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people, eyeglasses and hospital

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people and hospital

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாதீவு ரஜமஹா விகாரையில் 88 அடி உயரமுடைய புத்தர் சிலை திறந்து வாய்ப்பு!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கப்புவத்தை – கந்தானை புகையிரத கடவையில் விபத்து – இருவர் பலி

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube