தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.1 அளகுகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி நேற்று (28) செவ்வாய்க்கிழமை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவையே இந்த பூமியதிர்ச்சி மையம் கொண்டு தாக்கியுள்ளது.
பூமியதிர்ச்சியின் அதிர்வினால் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இச்சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
