Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வீதி விபத்து!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 28ஆம் திகதி இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுரிகஸ்வெவ பகுதியில் வீதியைக் கடந்த நாய் ஒன்றைத் தவிர்க்க முயன்றபோது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடகவெல பகுதியில் 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளதுடன், பின்னால் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.

மாவத்தகம பகுதியில் கண்டி – குருநாகல் பிரதான வீதியைக் கடக்க முயன்ற 67 வயதுடைய பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர்.

மஹாவ பகுதியில் பக்கவீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வீதி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சர்வதேச ரக்பி திருவிழா!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘அசிதிசி’ கல்வித்தொகை 2026: விண்ணப்பங்கள் கோரல்

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலையில் 2 பேருந்துகள் மோதி கோர விபத்து

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் 69வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube