Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏறாவூர் – மைலம்பாவெளி அம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு – நால்வர் காயம்

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஏறாவூர் – மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் , பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆலையத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (29) பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது, அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது, அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து 7 பேர் கொண்ட ஜயங்கேணி வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கயவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது, ஒருவரை மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்வு!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வழிகாட்டிகள் ராஜபக்ஷர்களே – விதர்ஷன கன்னங்கர!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 17,000 புதிய வீடுகள்!

ஆனி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube