சுகாதார அமைச்சகத்தின் உப சுகாதாரச் சேவைகளில், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் (MLT) மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் ஆகிய 02 தொழில்பிரிவுகளில் உள்ள 392 வெற்றிடங்களை பூர்த்திசெய்வதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன.
உப சுகாதார சேவைகளில், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் (MLT) மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் ஆகிய பணியிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு, 24 ஜூலை 2026 திகதியிட்ட வர்த்தமானியில் எண் 2499-இல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை, 2026 ஆகஸ்ட் 07-ஆம் திகதிக்கு முன்னர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, நிர்வாகப் பணி (2) பணிப்பாளர், எண் 106, டட்லி சேனநாயக்க மாவத்தை, கொழும்பு 08 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பின் காலம் 6 மாதங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில், பயிற்சி பெறுபவர்கள் இந்த ஆண்டு பயிற்சியின் போதான கொடுப்பனவு மற்றும் வாழ்வாதார கொடுப்பனவு உட்பட ரூ. 61,986.00 உதவித்தொகைக்குத் தகுதி பெறுவார்கள். பயிற்சிக்குப் பிறகு நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்படும்போது, 2027 ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்துடன் வாழ்வாதார கொடுப்பனவு உட்பட ரூ. 71,920 ஆரம்பச் சம்பளத்தைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
அதன்போது விளக்கமளித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகதன் கூடுதல் செயலாளர் சமிகா எச். கமகே, மருத்துவத் தொழிலுக்கான உப தொழில் சேவையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (MLT) பதவிக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை 253 என்றும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை 139 என்றும், மேற்கண்ட படிப்புகளுக்கு 392 பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
