Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குவது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நிர்வாக ரீதியில் மாகாண சபைகள் இயங்கலாம் என சிலர் கூறினாலும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பை நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனக் குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் உறுப்பினர்கள் இன்றி இயங்க அனுமதிக்கப்பட்டால், அதே நிலை நாடாளுமன்றத்திற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாகச் செயல்பட முடியாது என்றும், அவர்கள் மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறுபவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி உலக ஜனநாயக தினத்தில் இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்த அவர், அதற்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான முறை மற்றும் திகதி குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்களின் நலனுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பம்.

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீர் தங்க விலை ஏற்றம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் மழைக் காலநிலை – நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 31, 2026
இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube