2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறன்வாய்ந்த வேலைவாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால முன்னுரிமைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன், வணிக முக்கியத்துவம் வாய்ந்த 23 சர்வதேச சந்தைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் பங்கு, இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதில் மிகவும் முக்கியமானது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
