Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணி அகழ்வு – விமல் வீரவன்ச

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுகள் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் ஏன் கவனம் செலுத்தவில்லை என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்கு நீதி கோரி கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை குற்றங்கள் நிறைந்த இராச்சியம், இங்கு யுத்தக்குற்றங்களும், இனவழிப்பும் இடம்பெற்றுள்ளன என சர்வதேச அரங்கிற்கு காண்பிக்கும் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகிறது.

இந்த நாட்டில் வரி செலுத்துவதில் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றார்கள். சிங்களவர்களின் வரிப்பணத்தைக் கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளை இந்த அரசாங்கம் வந்தததன் பின்னர் தீவிரப்படுத்தியுள்ளது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அரச நிறுவனமாக காணப்பட்டாலும் அது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது. புலிகள் அமைப்பால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள பொலிஸார், சிங்கள மக்கள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இனப்படுகொலையும், யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றதாக சர்வதேசத்தக்கு காண்பிக்கும் போக்கு காணப்படுகிறது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

ஆடி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் விலை சரிவு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்க உத்தியோகபூர்வ தீர்மானமில்லை – ஹர்ஷன நாணயக்கார

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 கிலோ கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் மன்னாரில் கைது!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube