Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹொரண பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மில்லனிய – படகொட வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பாக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரனைப் பார்ப்பதற்காகச் செல்வதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, பொலிஸார் மோட்டார் சைக்கிளையும் சந்தேகநபர்களையும் சோதனையிட்டனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு சோற்றுப் பார்சல்களுக்குள் இருந்த மிளகாய் சம்பல் சிறிய பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடம் இருந்த கைப்பேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 5 விடைத்தாள் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

26 வயது கர்ப்பிணி பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube