Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அதிபர் கடத்தப்பட்டாரா?

ஆவணி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

ஈரானில் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டடிக்கப்பட்ட காரில் மொஜ்தபா கமேனியை சந்திக்க வைக்கப்பட்டதாக Iran International வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கமேனியை நேரில் சந்திக்க பெஷெஷ்கியன் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும், ராஜினாமா செய்வதாக எச்சரித்த பின்னரே சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பதிலாக, பாதுகாப்புப் படையினர் அவரை டெஹ்ரானில் உள்ள இரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பு மிகவும் இரகசியமாக நடைபெற்றதாகவும், அருகில் இருந்த நபரை பெஷெஷ்கியனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றும் அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நிமிடங்கள் மட்டுமே உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நபர் உண்மையில் மொஜ்தபா கமேனிதானா என்று பெஷெஷ்கியன் தனது உதவியாளர்களிடம் கேட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, மே 31 அன்று பெஷெஷ்கியன் உச்ச தலைவர் அலுவலகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியதாகவும் Iran International செய்தி வெளியிட்டது. அரசின் முக்கிய முடிவுகளில் அதிபரும் அமைச்சரவையும் புறக்கணிக்கப்பட்டு, IRGC-யின் தீவிரவாதப் பிரிவுகள் அதிக கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக அந்தக் கடிதத்தில் பெஷெஷ்கியன் குற்றம்சாட்டியதாக கூறப்பட்டது. ஆனால், ஈரான் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இதுவரையில் பெஷாஷ்கியான் 28 முறை ராஜினாமா செய்ய முயன்றதாக கமேனியின் குடும்ப உறவினர் ஒருவர் கூறியதாகவும் ஈரான் இன்டர்நேஷனல் மேற்கோள் காட்டியுள்ளது.

இதனால் ஒருபுறம், போரின் பின்னணியில் IRGC-யின் செல்வாக்கு அதிகரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் குறைந்து வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம், பெஷெஷ்கியன் கடத்தப்பட்டார் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. இருப்பினும், ராஜினாமா குறித்த செய்திகள் மற்றும் அரசுத் தரப்பின் மறுப்புகள், ஈரானின் அதிகார மையத்தில் உருவாகியுள்ள ஆழமான அரசியல் பிளவை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 25-35 ஆக திருத்துமாறு கோரிக்கை

புரட்டாதி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தாலும், எண்ணெய் விலை சரிவு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 302 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதிலும் 15000 தானசாலைகள் இதுவரையில் பதிவு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube