இலங்கை இராணுவத்தின் 26வது இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நேற்று (05) பிற்பகல் அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
பதவியேற்றதன் பின்னர் புதிய இராணுவத் தளபதி பிரதமரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பாரம்பரிய சம்பிரதாயத்தின்படி இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையில் நினைவூட்டல் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதன்போது இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவிற்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
