Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் வயோதிப தம்பதியினர் கொலை

hatton|death|dickoya

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாதோர் உட்பிரவேசித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுவாஞ்சிகுடி நகைக்கடை ஒன்றில் நூதன திருட்டு – பெண்ணொருவர் கைது!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்தொழிலாளர்கள் அவதானம்

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube