Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

10, 11 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட  கிராம உத்தியோகத்தர் சங்கம்  தீர்மானம்

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நோய் விடுப்பு அறிக்கை செய்து அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டப்.ஏ.பி.ஏ.விஜேரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த இரு நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையின் போது தங்களது தொழில்சார் கோரிகளுக்கு அதிகாரிகளிடமிருந்து நியாயமான தீர்வு அல்லது சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறாவிடின் இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு பொருத்தமானதும், குறைபாடுகள் அற்றதுமான சேவை, சேவைக்கான எரிபொருள், அலுவலகப் பராமரிப்பு, மற்றும் நாளாந்த கொடுப்பனவுகள் தொடர்பாக சில தரப்பு குழுவினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்,

அத்துடன் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட காலத்திலிருந்தே கடும் அநீதிக்கு உள்ளாகியுள்ள 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டின் பிரிவினரின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுகொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசியல் அதிகாரிகளிடமும் நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளிடமும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும் இதுவரை எந்தவொரு கோரிக்கைக்கும் தீர்வு வழங்கப்படாததன் காரணமாகவே அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தானசாலைகளில் குளிர்பானங்களுக்கு பதிலாக சூடான தேநீர் வழங்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானை தாக்கி பேருந்து விபத்து; பலர் காயம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு – அரசாங்கத்தின் மெகா திட்டம்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube