14.1 மில்லியன் ரூபாய் (1 கோடியே 41 இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று (06) தெஹிவளை மற்றும் ஹட்டன் பத்தனை பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 8 ஜோடி தங்கக் காதணிகள், 10 தங்கச் சங்கிலிகள், 4 பதக்கங்கள், வளையல்கள், கைவளையல் மற்றும் 2 மோதிரங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
28, 46, 53 வயதுடைய பெண்களும், 28 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
