Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராகலையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சி

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்று (07) வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த நபர்கள் இவ்வாறு சிலை வைக்க முற்படுவதை அவதானித்த மக்கள், அவ்வாறு செய்ய வேண்டாம் என வந்தவர்களிடம் கூறியுள்ளதுடன், ராகலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கு ஆக்கிரமிப்பான முறையில் சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் வழிபாடு மற்றும் காவல் தெய்வ வழிபாடு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அப்பகுதி மக்களின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குறித்த இடத்தில் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில், இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது ஏற்புடையவை அல்ல, அவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : ஒஸ்மனின் மகன் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிமன்றம் தீர்மானம்

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஆடி 21, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கிட்கேட் நிறுவனம் கையடக்கத் தொலைபேசிகளின் சிக்னல்களைத் துண்டிக்கும் விசேட “பிரேக் மோட்” (Break Mode) உறையை அறிமுகப்படுத்தியுள்ளது!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube