Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : ஒஸ்மனின் மகன் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிமன்றம் தீர்மானம்

ஆடி 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பாதாள உலகக்குழு தலைவர் என அறியப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலைத் தொடர்பில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, வர்த்தகரான ஷெஹான் குணசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தானை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு விடுக்க உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சசி மஹேந்திரன் மற்றும் ஆதித்ய பாலபட்டபெந்தி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்க எடுத்தக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கம்பஹா, இம்புல்கொட பகுதியை சேர்ந்த ஷெஹான் குணசேகர, சட்டத்தரணி அமில குமார ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த எழுத்தானை மனுவில், நான் ஒரு தொழிலதிபர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவம் தொடர்பில் எனது தந்தை கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கடந்த மே மாதம் 13ஆம் திகதி எனது தந்தையின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் இரு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். அத்துப்பாக்கிகளுக்கு சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்கள் உள்ள போதிலும், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக ஊடகங்கள் வாயிலாக தவறான செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கிடையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருகை தந்து வாக்குமூலம் அளிக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, நான் பல சந்தர்ப்பங்களில் அங்கு சென்று வாக்குமூலங்களை வழங்கியிருந்தேன்.

அவ்வாறு வாக்குமூலம் வழங்கியபோது, தாய்லாந்தில் இருந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் தொடர்புகளை வைத்திருந்தேனா? என வினவி, என்னை அச்சுறுத்தும் தொனியில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸாரால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கைது செய்யப்படுவதற்கான சாத்தியபாடுகள் காணப்படுவதால், அவ்வாறு கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இந்நிலையில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அமில குமாரவின் அறிவுறுத்தலின் பேரில், சட்டத்தரணி ருக்ஷான் சேனா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது முன்னிலையாகியிருந்தனர்.

மனுதாரரான ஷெஹான் குணசேகர, வர்த்தகரான ஒஸ்மன் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் புதல்வராவார். ‘கம்பஹா ஒஸ்மன்’ சமரரத்ன சஞ்சீவ எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தினுள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்புக்கு அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்தின்படி செயற்பட வேண்டும்.

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலி!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்திய தென் ஆபிரிக்க அணி!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube