Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மீதான கூடுதல் வரி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் முன்னணி கட்சியான ஜமாஅத்-ஏ-இஸ்லாமி (Jamaat-e-Islami) விடுத்த அழைப்பையேற்று கராச்சி, லாகூர், பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய பேரணிகளும் வீதி மறியல்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் நாட்டின் பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

அமெரிக்க-ஈரான் போர் மற்றும் சர்வதேச சந்தை சீர்குலைவு காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

அத்துடன், அரசாங்கம் புதிதாக விதித்துள்ள பெட்ரோலிய வரியால் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த போராட்டத்தின் போது உரையாற்றிய ஜமாஅத்-ஏ-இஸ்லாமி தலைவர் ஹஃபீஸ் நயீமுர் ரஹ்மான் (Hafiz Naeemur Rehman), சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்காக ஏழை மக்களை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனக் கடுமையாகச் சாடினார்.

தற்போதைய போராட்டங்கள் ஆரம்பகட்டமே எனக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் வரி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து மாகாண ஆளுநர் இல்லங்களுக்கு முன்பாக தொடர் மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் மத்தியஸ்தராகத் தன்னை வெளிப்படுத்த முனையும் பாகிஸ்தான் அரசு, சொந்த நாட்டில் வெடித்துள்ள இந்த கடும் பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் கொந்தளிப்பாலும் பெரும் திணறலைச் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூனைக்குட்டிகளுக்கு பெயர்வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

ஆடி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொண்டையில் பலூன் சிக்கியதால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube