தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் பகுதியில், பலூனை விழுங்கியதால் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, குறித்த சிறுவன் மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்
சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தொண்டையில் பலூன் சிக்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பலூன் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் விளையாட இதுபோன்ற பொருட்களை வழங்கும்போது பெற்றோர் கூடுதல் கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
