சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான பூனை துன்புறுத்தல் காணொளி தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) ஸ்ரீலங்கா வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தலாத்துஓயா பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குற்றவியல் சட்டத்தின் 411ஆம் பிரிவு, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 63(a) பிரிவு மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
