Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய நேற்று (08) சனிக்கிழமை மாத்திரம் 33,024 பேர் சோதனையிடப்பட்டுள்ளதோடு, பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியவகையில் வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நேற்று முன்தினம் ( 7 ) ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 33,024 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 437 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிறங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட135 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 239 நபர்களும் கைதுசெய்து செய்துப்பட்டுள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 68 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4189 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்க உத்தியோகபூர்வ தீர்மானமில்லை – ஹர்ஷன நாணயக்கார

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி ரயில் மார்க்கத்தின் 2 சேவைகள் இடைநிறுத்தம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube