Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பயன்படுத்தப்பட்ட நீச்சல் ஆடைகளை ஒன்லைனில் விற்பனை செய்ய தடை

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஜப்பானின் பிரபலமான இணையவழி வணிக நிறுவனமொன்று மாணவர்கள் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் ஆடைகளை தங்களது தளத்தின் வழியாக விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பதாக , பயனர்களுக்கு அறிவித்துள்ளது.

ஜப்பான் பாடசாலைகளில் உடற்கல்வி பாடத்தின் பகுதியாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக அவர்கள் அணியும் நீச்சல் ஆடை ஜப்பானிய மொழியில் ‘ஸ்கூல் மிசுகி’ என்று அழைக்கப்படுகிறது.

மாணவர்கள் விரைவாக வளர்ந்து விடுவதாலும், இவை சில முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதாலும், செலவைக் குறைப்பதற்காகப் பல குடும்பங்கள் பயன்படுத்திய நீச்சல் ஆடைகளை இணையவழி மூலமாக வாங்கவோ விற்கவோ முயல்கின்றன.

ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ஆடைகள் சிலருக்கு தவறான ஈர்ப்பாக அமைவதால், இத்தகைய பரிவர்த்தனைகள் தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு குறித்த இணையவழி நிறுவனம் இந்த தடையை விதித்துள்ளது.

பயன்படுத்திய பாடசாலை நீச்சல் ஆடைகளை விற்கும் நடைமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தடையை மீறி இவற்றை விற்பனை செய்ய முயலும் பயனர்களின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் குறித்த நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் 39ஆவது வருடாந்த மாநாடு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய் பாதிப்பு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மின் கட்டமைப்பை பாதுகாக்க சூரிய கலங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube