Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரம்ப்பின் “அமைதி சபை” அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரிப்பு!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் “அமைதி சபை” (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைத்து, கலைக்கப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து பின்வாங்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, “அமைதி சபையின் 15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் மறுக்கிறது. ஹமாஸ் உண்மையிலேயே ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை இராணுவம் எவ்விதப் பின்வாங்குதலையும் மேற்கொள்ளாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

போலியான கலைப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது என்றும், ஹமாஸ் அமைப்பு உண்மையான முறையில் முழுமையாகக் கலைக்கப்படுவதையே இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, “அமெரிக்காவிடம் சில யோசனைகள் உள்ளன. அவற்றில் சில எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சில ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு!

ஆவணி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

அடகுக் கடையில் தங்கக் கொள்ளை : சந்தேகநபர் கைது!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் இணையவழிக்கு மாற்றம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube