Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தவருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்குத் தலா 150,000 ரூபா வீதம் மொத்தம் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோகிராம் ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 5 கிலோகிராம் அடங்கிய பொதியொன்றை கிலோ ஒன்று 350 ரூபா வீதம் அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

வெல்லவாய – யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட ‘பொன்னி சம்பா GR 11’ அரிசி கிலோகிராம் ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக உள்ள நிலையில், அதனை கிலோ ஒன்று 260 ரூபாவிற்கு சில்லறை விற்பனை செய்த மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவருக்கும் தலா 150,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயா – பதுளை ரயில் போக்குவரத்து வழமைக்கு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ அச்சுறுத்தல்: அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற விநியோகத்திற்கு நடவடிக்கை

ஆவணி 25, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மருதமுனையில் விபத்து; மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube