மருதமுனை பெட்ரோல் நிலையம் அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் அலுவலகம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
