கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான ‘கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகையினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
