Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக நடமாடும் பேருந்து

#போதைப்பொருள் #பரிசோதனை #நடமாடும்பேருந்து #போதைப்பொருள்ஒழிப்பு #பேருந்து #இலங்கை #SriLanka #DrugTesting #DrugPrevention #NewsUpdate

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முறைசார்ந்த பொதுப் போக்குவரத்திற்காகச் செயல்படுத்தப்படும் எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார அமைச்சைச் சேர்ந்த மேலும் ஒரு நடமாடும் பேருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசியத் திட்டத்தின் இரண்டாண்டு மூலோபாயத் திட்டத்திற்கு அமைய இது செயல்படுத்தப்படுகின்றது.

 

இதன்படி, இந்நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை மேலும் விரிவாக்குவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பரிசோதிக்கும் இந்நடமாடும் பரிசோதனைத் திட்டம், தற்போது நாட்டின் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 

பரிசோதனைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களைக் படிப்படியாக அபிவிருத்தி செய்வதன் மூலம், நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இப் பரிசோதனைச் செயல்பாட்டை விரிவுபடுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைத் தேசியத் திட்டத்தின் கீழ், இதுவரை 7,150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இத்திட்டத்திற்காக அமைச்சுக்களுக்கிடையிலான ஒத்துழைப்பைப் பெற்று, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்தினூடாக நாட்டின் வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைக் குறைப்பதே எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கடுமையான வெப்பநிலையினால் 7 பேர் பலி!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காம ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube