Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில்!

#உலகத்தமிழாராய்ச்சிமாநாடு #தமிழாராய்ச்சிமாநாடு #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணம்2027 #தமிழ் #தமிழ்மொழி #தமிழாராய்ச்சி #உலகத்தமிழ் #11ஆவதுமாநாடு #Jaffna #TamilResearch #TamilLanguage #TamilConference #SriLanka

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

11 ஆவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி மாநாடாகவும் இதுவே அமைந்தது.

யாழ். குடாநாடே விழாக் கோலம்பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இம் மாநாட்டின் இறுதி நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும் வரலாற்றில் பதிவாகியிருந்தது.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்-2027 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்குமாறு SLPP கோரிக்கை!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் 39ஆவது வருடாந்த மாநாடு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த ரங்க ராஜபக்ச தற்கொலையே செய்துகொண்டார்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube