Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு: ‘குடு அஞ்சு’ மீது காவல்துறை சந்தேகம்!

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான ‘குடு அஞ்சு’ என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் பிற்பகல் 1.20 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 54 வயதான நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மையில் இரத்மலானை பகுதியில் ‘குடு அஞ்சு’வின் நெருங்கிய சகா ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் பதவி விலகல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு மூடல்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடைகிறது!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரை 471 மருந்தகங்களில் விசேட சோதனை!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube