லக்கல, தோரப்பட்டிய பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 78 வயதான உயிரிழந்த நபர் அவரின் மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து மருமகன் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை லக்கல பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
