Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளுமாறு கோரி நாளை போராட்டம்!

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் அள்ளுமாறு கோரி நாளை புதன்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்வதற்காக தோண்டப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வட மாகாண ஆளுநர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரை காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும் சூழல்சார், சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது முன்னோருக்கு பிதிர்க்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாடச் செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவாசை தினத்துக்கு முன்னர், மீண்டும் அள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் குப்பைகளை அள்ளுவதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

கடற்பரப்புக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேடப்படும் 3 சீனர்கள் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

ஆடி 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழப்பு!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube