Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

“போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற பெயரில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ‘போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்’ எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

அத்துடன் போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதமான கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதல்வர் விஜய் தலைமையில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் ‘போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் பெயரில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் – அரசின் சார்பில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அழிக்கப்பட்டதன் காணொளியை பார்வையிட்டார்.

அத்துடன் போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்’ தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

போதை பொருளை ஒழிப்பதில் சிறப்பாக கடமையாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

போதை பொருள்களின் பாவனையை குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட பாடசாலை மற்றும் கல்லூரிகளில் மூன்று பிரத்யேக தன்னார்வலர்கள் குழுக்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில் 37 மாவட்டங்களில் இருந்து 2000 மாணவர்கள் நேரில் வருகை தந்தனர். அத்துடன் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொளி வாயிலாக பங்கு பற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் மூலம் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சலே, கடவுச்சொற்களை வழங்காமைக்கான காரணங்களை வௌிப்படுத்திய கம்மன்பில

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலியான இலங்கை தரச்சான்று இலச்சினையுடன் 8500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube