தங்காலை, குடாவெல்ல பகுதிக்குட்பட்ட நகுலுகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோது வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
