ஹம்பாந்தோட்டை – மித்தெனிய – உல்ஹிட்டியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் எனத் தெரியவந்துள்ளது.
