2026ஆம் ஆண்டுக்கான உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, கேகாலை – ரம்புக்கணை – பின்னவல யானைகள் பாதுகாப்பு மையத்தில் இன்று (13) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வாக, யானைகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட “சுதந்திர யானைகள் சரணாலயம்” இரண்டாம் கட்டம் ரம்புக்கணை தொகுதி அமைப்பாளரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சமந்த ரணசிங்கவால் திறந்து வைக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு ஐந்து யானைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பின்னவல யானைகள் காப்பகம், காயமடைந்த மற்றும் பல்வேறு காரணங்களால் பாதுகாப்பு தேவைப்படும் யானைகளை பராமரித்து, பாதுகாக்கும் நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இது படிப்படியாக நவீன யானைகள் பாதுகாப்பு மையமாக மாற்றமடைந்துள்ளது.

