குயில்வத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாகப் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை (15) அதிகாலை 1.00 மணியளவில் குயில்வத்த பகுதியில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் திடீரென மண்மேடொன்று சரிந்து விழுந்ததில், அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் தடைப்பட்டிருந்தது.
எனினும், சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து தற்போது வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதால், அவ்வீதியினூடாகப் பயணிக்கும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்து இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது.
