நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்கள் இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், அவர்களின் பூதவுடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்த அதிகாரிகள் உயிரிழந்தனர்.
