Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்று இறைச்சிக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் 25 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விலங்குத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (10) இடம்பெற்ற இச் சோதனையின் போது, மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த மாடுகளையும் பொலிஸார் முதற்கட்டமாகக் கைப்பற்றினர்.

பொலிஸாரைக் கண்டதும் காரில் வந்த இருவர் தப்பியோடிய போதிலும், பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி அவர்களை விரைவாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 530 மில்லிகிராம் மற்றும் 5 கிராம் 150 மில்லிகிராம் என மொத்தம் 10 கிராம் 680 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 7 மாடுகள் மற்றும் வங்காமம், இறக்காமம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும், பகுதி சார்ந்த விலங்குத் திருட்டுகள் குறித்தும் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

ஆவணி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டப்படும்!

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறை அமைதியின்மை குறித்து விசாரணை

ஆவணி 7, 2026
இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவு வழங்க கடற்படையின் 4 நடமாடும் சமையலறைகள் தயார்!

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube