சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கடுவலை பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் ஊர்வலம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீதி உலா இடம்பெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, ஊர்வலம் செல்லும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாற்று வழிகள்
143 – அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தியிலிருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வேளையில், மாற்று வழிகளாக 697 பேருந்து வீதியில் பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவலை – கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, மாலபே திசையை நோக்கி உள்ள ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.
