Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனம் முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஆவணி 16, 2026
படிக்க 3 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியுமா? அதேபோன்று சுகாதார  தொழிலாளர்; என்ற போர்வையில் சபையின் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கும்  கட்சி சார்ந்தவர்களுக்கும்  நியமனங்கள் வழங்கி குளுகுளு அறையில் வேலைக்கு அமர்த்திய முறைகேடு தொடர்பாக கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈ.பி.டிபி. கட்சியின் வாராந்த ஊடக மாநாடு  பாலைமீன்மடுவில் உள்ள காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது இதன்போது கட்சியின் இணைப்பாளர் சிவானந்தராஜா, ஒருங்கிணைப்பாளர்  அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

மட்டு மாநகர சபையின் 16 அமர்வில் சபை உறுப்பினர்கள் தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதார தொண்டர்களுக்கு முறையற்ற விதத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக தங்களது ஆதங்கங்களை வெளியிட்டனர். இது ஊடகங்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது இதனை அறிந்த பின்னர் தகவல்களை தேடிய போது சுகாதார தொழிலாளர்கள் என நியமனங்கள் வழங்கி அவர்களுக்கு மாநகரசபைக்குள்ளும் வாசிகசாலைக்குள்ளும்; கடமையாற்றுவதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு  தொடர்பாகவும் மாநகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்  ஒருவருக்கு  அங்கு மீண்டும் ஓப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட துடன்  மாமாங்க ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் அவருக்கு மேலதிகமாக தினம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்கி ஒரு திணைக்களத்தில் ஒருவருக்கு 3 வேதனங்கள் வழங்கிய முறைகேடு உட்பட 5 மோசடிகள் தொடர்பாக  கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

ஒரு திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் 6 மாதம்  என்ற அடிப்படையில் அவருக்கு ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது.   ஆனால்  அங்கு கடமை புரிந்து ஓய்வுக்கு சென்ற உத்தியோகத்தர் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்து 3 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு ஒரு திணைக்களத்தில் 2 வேதனங்களை பெற்று வருகிறார்.

அதுமட்டுமல்ல  மாநகரசபையின் முக்கியஸ்தருக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் மாமாங்க கோவில் உற்றவ காலத்தில் அங்கு இரவு கடமையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டு ஒரு நாளைக்கு இரவுக்கான கொடுப்பனவாக 3 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருவருக்கு 3 கொடுப்பனவுகள் ஒரே திணைக்களத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இது யாருடைய பணம்? மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்  மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் ஒரு வேண்டுகோள் மாநகரசபையில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு இவ்வாறு தவறுகள் எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுக்கு கிடைக்காமல் போன நோக்கம் என்ன?

இது தொடர்பாக சபையில் குரல் கொடுக்காது இருக்கின்றீர்கள் மக்களும் உங்களை நம்பிதான் வாக்களித்து சபைக்கு அனுப்பியுள்ளனர். மாநகர சபையின் அங்கம் வகிக்கும் நீங்கள் தயக்கம் இன்றி குரல் கொடுக்க வேண்டும் இது நீதிக்கும் சுதந்தித்துக்குமான நாடு கருத்து சுதந்திரம். ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இருக்கின்றது.

எனவே இவ்வாறான தவறுகள் தொடர்பாக குரல் கொடுக்காமல் விட்டால் இப்படியான சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு நீங்களும் உடந்தையா? என மக்கள்  கேள்வி கேட்கின்றனர். எனவே உங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர் ஆதலால் மாநகரசபையில் நடைபெறும் முறைகேடுகள்  தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும்

அதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வேலையில்லா பட்டதாரிகள் எத்தனையோ போர்  இருக்கின்றனர் அண்மையிலே வேலையில்லா பட்டதாரி ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக மேசன் தொழிலுக்கு  காத்தான்குடிக்கு சென்று கட்டிட வேலையில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

எனவே இவ்வாறான வேலைவாய்ப்பு மாநகரசபையில் இருக்குமாயின் தங்களுடைய உறவினர்களுக்கும் தங்கள் கட்சி சார்ந்தவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதை விடுத்து உரிய திணைக்களத்தின் அனுமதியை பெற்று சட்டரீதியாக விளம்பரப்படுத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கவும்.

தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியும்? அதேபோன்று சுகாதார  தொழிலாளர் என நியமனங்கள் வழங்கி அவர்களை குளுகுளு அறையில் வேலைக்கு அமர்துகின்றீர்கள் அது எந்த விதத்தில் நியாயம்? சட்டத்துக்கு விரோதமான செயல்கள் என தெரிந்து அதிகாரத்தை பயன்படுத்தி சுகாதார தொழிலாளர்கள் என்ற போர்வையிலே உறவினர்களுக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பளத்தில் பின்தங்கிய இலங்கை

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை!

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் பதவி விலகல்!

ஆடி 15, 2026
இலங்கை

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube