Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இதயவியல் சிகிச்சைப் பிரிவு திறப்பு

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதியின் திறப்பு விழா நேற்று (17) வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

May be an image of hospital and text that says 'இருதயவியல் விடுதி හෘද රෝග වාට්ටුව CARDIOLOGY WARD 46 ஆண்கள் விடுதி பெண்கள் விடுதி පිරිමි වාට්ටුව කාන්තා වාට්ටුව MALE WARD FEMALE WARD WARD 45'

வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில், வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் வைத்தியர் அருள்நிதி, பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

May be an image of one or more people, people smiling and dais

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், நவீன மருத்துவ உபகரணங்களுடன் நோயாளர்களுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

May be an image of one or more people, people smiling and hospital

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதய நோயாளர்களுக்கான தனியான சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதி அமைக்கப்படுவது நீண்டகால தேவையாக இருந்து வந்த நிலையில், புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளமை நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதயவியல் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் அருள்நிதி, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் சமூகத்தின் சார்பில் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்.

May be an image of one or more people and people smiling

புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இதய நோயாளர்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபான ஒழிப்புத் திட்டம்-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெர்வின் சில்வா சொத்துகள் வழக்கு: ரூ.600 மில்லியன் சொத்துகள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொரலஸ்கமுவயில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

20 கிலோகிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வந்த ஒருவர் கைது!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube