இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இலங்கை மண்ணில் நடந்துவருகிறது. காலி மைதானத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 284 ஓட்டங்களை பெற்றது . 3ஆம் நாள் ஆட்டமுடிவில் 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, துடுப்படவுள்ளது.
இந்நிலையில் நேற்று (17) நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியாவின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இலங்கை கேப்டன் தனஞ்செயவை 22ஓட்டங்களுக்கு வெளியேற்றிய ஜடேஜா, சதமடித்த சோனல் துனுஷியாவை 101ஓட்டங்களுக்கு வீழ்த்தினார்.
இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 பேர் மட்டுமே படைத்த சாதனையை 4வது வீரராக படைத்து அசத்தியுள்ளார். 4000 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றிருக்கும் ஜடேஜா 350 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
4000 டெஸ்ட் ரன்கள் + 350 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
கபில் தேவ் – 5248 ரன்கள் + 434 விக்கெட்டுகள் – இந்தியா
இயன் போத்தம் – 5200 ரன்கள் + 383 விக்கெட்டுகள் – இங்கிலாந்து
டேனியல் வெட்டோரி – 4531 ரன்கள் + 362 விக்கெட்டுகள் – நியூசிலாந்து
ரவீந்திர ஜடேஜா – 4108 ரன்கள் + 350 விக்கெட்டுகள் – இந்தியா
5வது இந்திய வீரர் ஜடேஜா!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது இந்திய வீரராக சாதனை படைத்தார் ஜடேஜா.
அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள்:
அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் – 537 விக்கெட்டுகள்
கபில் தேவ் – 434 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் – 417 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா – 350 விக்கெட்டுகள்*
3வது இடதுகை ஸ்பின்னர்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இடதுகை ஸ்பின்னராகவும் சாதனை படைத்துள்ளார் ஜடேஜா.
இடது கை ஸ்பின்னர்கள் டெஸ்ட் விக்கெட்டுகள்:
433 – ரங்கன ஹேரத்
362 – டேனியல் வெட்டோரி
350* – ரவீந்திர ஜடேஜா
