Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான எச்சரிக்கை

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், வாகனத்தினதும் சாரதியினதும் விபரங்களை உறுதிப்படுத்துவதுடன், தாம் பயணிக்கும் தற்போதைய நேரடி இருப்பிடத்தை நம்பகமான ஒருவருடன் பகிர்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொள்ளை, திருட்டு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும், வாடகை வாகனச் சாரதிகள் அல்லது சேவை வழங்குநர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்து, இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

பயணிகள் தமது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், வாகனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதன் பதிவு இலக்கம், வாகனத்தின் மாதிரி மற்றும் சாரதியின் பெயர் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் போது, தெரியாத அல்லது ஆள்நடமாட்டமற்ற வழிகளில் சாரதி வாகனத்தை இயக்க முற்பட்டால் பயணிகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

பயணிகள் தாம் சேருமிடத்தைச் சென்றடையும் வரை, மொபைல் போன் அல்லது பிரத்யேக செயலிகள் மூலம் தமது நேரடி இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அவசியமாகும்.

அத்துடன், பயணத்தின் போது தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ ஏற்படும் பட்சத்தில், உடனடியாக 119 பொலிஸ் அவசர உதவிச் சேவைக்கோ அல்லது 118 அவசரத் தகவளிக்கும் சேவைக்கோ தொடர்புகொண்டு வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த தாய் சடலமாக மீட்பு, 10 வயது மகள் நீரில் மாயம்

ஆனி 29, 2026
இலங்கைவிளையாட்டு

கண்டி அணியை வீழ்த்தி தம்புள்ள சிக்ஸர்ஸ் வெற்றி!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து இலங்கை வீரர் சாதனை!

ஆனி 5, 2026
இலங்கை

நாணயமாற்று விகிதம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube