பீஜிங் நகரில் நடைபெற்று வரும் உலக ரோபோ மாநாட்டில், சீனாவைச் சேர்ந்த ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள், பொதிகளை தரம் பிரிப்பது, கையடக்கத் தொலைபேசிகளை பொதி செய்வது மற்றும் வீட்டு வேலைகளில் உதவுவது போன்ற பல்வேறு திறன்களைக் கொண்ட மனிதர்களின் உருவங்களை ஒத்த ஹியூமனாய்ட் ரோபோக்களை காட்சிப்படுத்தியுள்ளன.
இந்த மாநாட்டில் வெறும் காட்சிப் பொருட்களுக்கு அப்பால், தொழில்துறை மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு ரோபோக்களை மாற்றுவதை, குறித்த நிறுவனங்கள் இலக்காகக் கொண்டுள்ளன.
300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், 2,000 க்கும் அதிகமான ரோபோக் கண்காட்சிகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன், இந்த துறை நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் மாறியுள்ளது.
