Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணிநேர நீர் விநியோக தடை

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை 22ஆம் திகதி முதல் நாள்தோறும் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்கின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி, நாளை சனிக்கிழமை (22) முதல் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நாளாந்தம் நீர் விநியோகம் தடைப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை வழமைக்கு திரும்பும் வரை நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு அதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10 அடியாக குறைந்துள்ளதுடன், தற்போது மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வானிலை அவதானிப்பு நிலையத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” 

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை, பாமன்கடை பகுதிகளில் நீர்வெட்டு!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்- சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube