Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியினால் பாதிக்கப்பட்ட யாழ் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு நீர் வழங்கும் திட்டம்

ஆவணி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள போனி குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டம், வடக்கு கடற்படை கட்டளையினால் நேற்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.

வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளதால், தீவுப் பகுதிகளில் வாழும் போனி குதிரைகள் உட்பட ஏனைய வனவிலங்குகள் குடிநீர் தட்டப்பாட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதற்கமைய, நெடுந்தீவின் பல்லுயிர்ப் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், வடக்கு கடற்படைத் தளபதியின் மேற்பார்வையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனமான ‘வசப’ மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

நெடுந்தீவின் அழகிற்குப் பங்களிக்கும், அத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக இவ்வாறாகக் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் சுத்தமான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தீவுப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் மக்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியையும் கடற்படை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

21 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!

ஆடி 18, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR முறைமையை நீக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் தெரிவுக்குழுவிலிருந்து வௌியேறிய எதிர்க்கட்சி

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube